44 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் 8 ஆவது சுற்றில் இந்தியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடக்கும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை 7 சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற முடிந்து உள்ளன. இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 6) 8 ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியா சார்பில் மகளில் பிரிவில் 3 அணிகளும், பொதுப்பிரிவில் 3 அணிகளும் களம் இறங்கினர். இதில் இந்தியாவிற்கு முதல் வெற்றி பதிவாகியுள்ளது.
பெண்கள் பிரிவில் பி அணியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பத்மினி ராவத் குரோஷியாவின் அனமரிஜாவை 28 ஆவது நகர்த்தலில் வீழ்த்தியுள்ளார். மேலும் பி அணியில் விளையாடிய திவ்ய தேஷ்முக் குரோஷியா வீராங்கனை தெரேசாவை 31 ஆவது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்திய பி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய ஒபன் பிரிவில் பி அணி வீரர் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் அமெரிக்க செஸ் சாம்பியன் சோ வெஸ்லி உடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடந்து வந்த போட்டியில் பிரக்ஞானந்தா 33 ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.
இந்திய மகளிர் ஏ அணியின் வீராங்கனை தானியா உக்ரைன் வீராங்கனை நடாலியா புக்சா உடன் விளையாடினார். 0.5 புள்ளி என்ற கணக்கில் 28 ஆவது நகர்த்தலில் தானியார் போட்டியை சமன் செய்தார்.
மோனிஷா