நடப்பாண்டில் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் ஒரு ஆண் என தெரிய வந்துள்ளது.
இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்பு மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பிரெஞ்சு பத்திரிகையாளர் ட்ஜப்பர் எய்ட் அவ்டியோ என்பவர் இமானின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கைப்பற்றி உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். பாரிஸ் மற்றும் அல்ஜிரியஸ் நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் இமான் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆண்களின் உடலில் எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும். இமானுக்கு எக்ஸ் ஒய் குரோமசோம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இமான் கெலிஃப்-க்கு உடலின் உட்புறமாக ஆண்களுக்கு இருப்பது போன்ற விதைப்பைகள் சிறிய ஆணுறுப்பு இருப்பதும் கர்ப்ப பை இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்ட ஒருவரை பெண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க வைத்தது எப்படி என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
கடந்த 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் போது சர்வதேச குத்து சண்டை அமைப்பால் இறுதிப் போட்டிக்கு முன் அவர் தடை செய்யப்பட்டு இருந்தார். அதையும் மீறி சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அவரை மகளிர் குத்துச்சண்டை பிரிவில் அனுமதித்தது எப்படி? என்கிற கேள்விக்கு இப்போது வரை விடை இல்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இமானுடனான மோதலின் போது, இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் போட்டியில் இருந்து விலகினார். தன் வாழ்வில் இத்தனை வேகமான தாக்குதலை சந்தித்ததில்லை என்று அவர் அப்போது சொன்னது நியபாகம் இருக்கலாம்.
தற்போது, இமானிடத்தில் இருந்து தங்கப்பதக்கத்தை பறிக்க வேண்டுமென பல பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜனும் இந்த விவகாரம் தொடர்பாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாராஷ்டிரா தேர்தல்: 4140 வேட்பாளர்கள் போட்டி!
கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃப்லிண்டாஃப் பற்றிய ஆவணப் படம்!