விடாமுயற்சிக்கு பதிலாக அஜித் கொடுத்த பொங்கல் விருந்து!

Published On:

| By Selvam

துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் 991 என்ற பிரிவில் ‘அஜித் குமார் ரேஸிங்’ அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸிங் போட்டியில் தனது அணியுடன் அஜித் கலந்துகொண்டுள்ளார்.

தகுதிச்சுற்று போட்டியில் அஜித் குமார் ரேஸிங் அணி 7-ஆவது இடத்தைப் பிடித்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தநிலையில், 991 கார் ரேஸிங் பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த அணி கார் ரேஸில் 23-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும், போட்டியின்போது அஜித் குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இருப்பினும் அவர் கார் ரேஸில் கலந்துகொண்டார். இதற்காக, ‘ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

இதனால் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. வெற்றி பெற்றதும் அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி வெற்றிக் குதூகலத்தில் துள்ளி குதித்து ரசிகர்களை நோக்கி முத்தமிட்டவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்கு துணை முதல்வர் உதயநிதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் மாதவன் கார் ரேஸ் நடைபெறும் இடத்தில் அஜித்தை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் இப்படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்தநிலையில், கார் ரேஸில் அஜித்தின் வெற்றி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

செல்வம்

மத கஜ ராஜா: விமர்சனம்!

முத்துசாமியின் எடுப்பார் கைப்பிள்ளைகளுக்கே வாய்ப்பா? – பட்டியல் போட்ட ஈரோடு திமுக நிர்வாகியின் வைரல் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel