மன்னரான அஜய் ஜடேஜா: உயர்ந்த சொத்து மதிப்பு!

Published On:

| By Kumaresan M

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜாம்நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சத்ருஷல்யசிங் ஜடேஜா தனது ஒன்று விட்ட சகோதரரின் மகனான அஜய் ஜடேஜாவை தனது ராஜ்ஜியத்தின் வாரிசாக அறிவித்துள்ளார். இவர் இளம் வயதிலேயே விவாகரத்து பெற்றவர் என்பதால்  வாரிசுகள் இல்லை. எனவே அஜய் ஜடேஜா அரசரின்  வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அஜய் ஜடேஜாவுக்கு அரண்மனை, கல்வி நிறுவனங்கள், நில புலன்கள் உள்ளிட்ட பல்வேறு அரச பரம்பரை சொத்துக்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சத்ருஷல்யா சிங் ஜடேஜா,  “எனது  வாரிசாக மாற  அஜய் ஜடேஜா ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து நான் விடைபெறுகிறேன்.   சரியான மனிதரிடத்தில் பொறுப்பை கொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஜாம் நகர் அரசராக ஜடேஜா பொறுப்பேற்றதையடுத்து, அவரின் நிகர மதிப்பு சுமார் 1,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்னதாக, இவரது சொத்துமதிப்பு 250 கோடி ரூபாயாக இருந்தது .  தற்போது அவர் விராட் கோலி, சச்சின் மற்றும் தோனியை விட அதிக பணம் கொண்ட முன்னாள் கிரிக்கெட்டராக மாறியுள்ளார்.

அஜய் ஜடேஜா தவ்லத்சிங்ஜி ஜடேஜாவின் மகன் ஆவார். ஜடேஜாவின்  தந்தை ஜாம் நகர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். ஜடேஜாவுக்கு  தற்போது 53 வயதாகிறது.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் அணிக்கு  மென்டராக ஜடேஜா இருந்தார். கிரிக்கெட் வர்ணணையாளராகவும் பணியாற்றி வந்தார். சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லியின் மகள் அதிதியை ஜடேஜா திருமணம் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 கடைசி வரை நடிகர் திலகம் பாட்டு… அமைதியாக அடக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சிவாஜி

சென்னையில் இந்த ரூட்ல போக வேண்டாம்… போலீஸ் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel