டாம் கரணை தொடர்ந்து மேலும் ஒரு பந்துவீச்சாளர் ஆர்சிபி அணியில் இருந்து விலகலாம் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆர்சிபி அணியில் தற்போது அல்சாரி ஜோசப், ஆகாஷ் தீப், முஹமது சிராஜ், டாம் கரண், ராஜன் குமார், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள், லாக்கி பெர்குஷன், ஹிமான்ஷு ஷர்மா, வைசாக் விஜயகுமார் ஆகிய பவுலர்கள் இருக்கின்றனர்.
பகுதிநேர பந்துவீச்சாளர்களாக மேக்ஸ்வெல், கரண் ஷர்மா, மஹிபால் லாம்ரோர், மனோஜ் பாண்டேஜ், ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளனர்.
மினி ஏலத்தின் போதே, சிறந்த பந்துவீச்சாளர்கள் யாரையும் எடுக்கவில்லை என ஆர்சிபி அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே அந்த அணி தற்போது அடுத்தடுத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது.
முன்னதாக டாம் கரண் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
பிஎஸ்எல்(PSL) தொடரில் விளையாடி வந்த ரீஸ் டாப்லி காயம் காரணமாக அதில் இருந்து விலகி இருக்கிறார். டெத் ஓவர்களில் நன்றாக பந்து வீசக்கூடியவர் என்பதால் தான் டாப்லியை ரிலீஸ் செய்யாமல் ஆர்சிபி தக்க வைத்திருந்தது
தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, ஆர்சிபி அணியில் இரண்டு பந்துவீச்சாளர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
டாம் கரண், ரீஸ் டாப்லி இருவரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினால் புதிய பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி தேட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அந்த அணிக்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாமல் எவ்வளவு ரன்களை அடித்தாலும், வெற்றிக்கு உதவாது என்பதை ஆர்சிபி புரிந்து கொள்ள வேண்டும் என்பதே விமர்சகர்கள், ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதை அந்த அணி புரிந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜெ.பி.- திமுகவில் அதிர்வலைகள் ஏன்?
”அடிமேல் அடி” ஆர்சிபி-க்கு வந்த அடுத்த சோதனை… என்னன்னு பாருங்க!