டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக கால்பதித்த உகாண்டா!

விளையாட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக இடம்பிடித்துள்ள உகாண்டா அணி ஐந்தாவதாக நுழைந்த ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதேவேளையில், 2023 உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ததை தொடர்ந்து தற்போது டி20 உலகக் கோப்பை தொடரிலும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ஜிம்பாப்வே அணி.

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.  போட்டியை நடத்தும் நாடுகள் என்ற முறையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.

2022 டி20 உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஏற்கெனவே 10 அணிகள் நேரிடையாக தொடருக்கு தகுதிபெற்றன.

அதன்பின்னர் பிராந்திய தகுதிப்போட்டிகளின் அடிப்படையில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா, பப்புவா நியூ கினியா, நேபாள் மற்றும் ஓமன் உள்ளிட்ட  அணிகளும் தகுதிப்பெற்றுள்ளன.

Uganda & Namibia Coming For T20 WC 2024 | Africa Qualifier Finals | Daily Cricket - YouTube

நமீபியா, உகாண்டா வரலாற்று சாதனை!

இந்த நிலையில் கடைசி 2 இடத்திற்கான தகுதி சுற்று போட்டி ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் நடைபெற்றது.

இதில் நமீபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, நைஜிரியா, டான்சானியா, ருவாண்டா ஆகிய 7 அணிகள் பங்கேற்றன.

இதில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற நமீபியா அணியும், 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் இரண்டாவது இடம்பிடித்த உகாண்டா அணியும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

இதன்மூலம் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக விளையாடும் தகுதியை பெற்றுள்ளது உகாண்டா அணி.

ZIM vs UGANDA: T20 वर्ल्ड कप 2024 का शानदार आगाज! 23वीं रैंक की टीम ने जिम्बाब्वे को बुरी तरह धोया, 5 विकेटों से दर्ज की धमाकेदार जीत

வாய்ப்பை இழந்த ஆப்பிரிக்கா ராசா!

அதே நேரத்தில் நமீபியா மற்றும் உகாண்டா அணிகள் இடையேயான போட்டியில் தோல்வியை தழுவி, முக்கிய அணியான ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

மேலும் தகுதி சுற்று போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் ஜிம்பாவே அணி,  இந்த தோல்வியின் மூலம் 2025இல் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடர்களின் வாய்ப்பை சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி தவறவிட்டது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இனி ‘லவ்வர்’ மணிகண்டன்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

EXIT POLL 2023: ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *