சென்னையின் ஆதரவு… நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்கள்: பாபர் ரியாக்சன்!

விளையாட்டு

ICC WorldCup: உலகில் மிகவும் கிரிக்கெட் அறிவு உடைய ரசிகர்கள் கொண்ட நகரம் சென்னை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான நேற்றைய போட்டி.

கடந்த 14ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் மனகசப்பான சம்பவங்கள் பல அரங்கேறின.

இந்த நிலையில் சேப்பாக்கில் நேற்று(அக்டோபர் 23) நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் சென்னை ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

Image

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தானை பந்தாடிய ஆப்கான் வீரர்கள்!

தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான குர்பாஸ் (65) மற்றும் சர்தான்(87) ஆகியோர் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தனர்.

இருவரும் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத்(77*) மற்றும் கேப்டன் ஷாகிடி(48*) ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை அற்புதமாக எதிர்கொண்டு 49வது ஓவரிலேயே வெற்றியை பதிவு செய்தனர்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான், அதே போன்று தற்போது பாகிஸ்தானையும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மைதானத்தில் வலம் வந்த வீரர்கள்!

போட்டி முழுவதும் இரு அணி வீரர்களுக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில்,  போட்டி முடிந்ததும் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்னை ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மைதானத்தை சுற்றி வந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பதிலுக்கு சென்னை ரசிகர்களும் மைதானத்தில் எழுந்து நின்று ஆப்கானிஸ்தான் அணியினருக்கு உரிய மரியாதையை கொடுத்தனர். இது உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை சென்னை மக்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள மரியாதையை எடுத்துக்காட்டியது.

ஏன் தோல்வி? – பாபர் அசாம்!

போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், “ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தோல்வி  எங்களுக்கு வலிக்கிறது. வெற்றிபெறக்கூடிய இலக்கு தான். ஆனால் பந்துவீச்சில் நன்றாக தொடங்கி, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காததால் தோல்வியை தழுவினோம்.

அதேவேளையில் பவுலிங், பீல்டிங், பேட்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆப்கான் அணி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பாபர் அசாம் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தானுக்கு முதல் 4 இடங்களுக்குள் நுழைவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் இனி வரும் ஒவ்வொரு லீக் போட்டியும் இரு அணிகளுக்குமே நாக் – அவுட் போட்டியாக தான் இருக்கும்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம்னி பேருந்துகள் இன்று இயங்குமா? இயங்காதா?: பயணிகள் குழப்பம்!

ஹெல்த் டிப்ஸ் : பற்களில் உள்ள மஞ்சள் கரையை ஈஸியாக போக்கவேண்டுமா.. இதோ வீட்டு வைத்தியம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *