ஆஸ்திரேலியாவிற்கு ஷாக் கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

விளையாட்டு

ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகுவதாக அறிவித்ததை அடுத்து, பிபிஎல் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விலகியுள்ளனர்.

இந்திய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி, மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது.

இதற்கிடையே கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைமையிலான அரசு பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் திடீர் அறிவிப்பு

இத்தகைய பெண்களுக்கு எதிரான தலிபான் அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து மார்ச் மாதத்தில் விளையாட இருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியம் இன்று காலை அறிவித்தது.

இந்த முடிவினால் கடும் அதிருப்தி அடைந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(ஏசிபி) தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவிடம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஏசிபி வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதில் இருந்து விலகும் ஆஸ்திரேலியாவின் முடிவு நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது.

இது ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கொஞ்சம் கொஞ்மாக அதிகரித்து வரும் விளையாட்டின் மீதான அன்பையும், ஆர்வத்தையும் பாதிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.

ஆப்கான் வீரர்கள் விலகல்

மேலும், ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியற்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விலகுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, பிக்பேஷ் லீக்கில் விளையாடி வரும் ரஷீத்கான், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் பிபிலீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் முடிவை குழந்தைத்தனமானது என்று ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தான் நம்பிக்கை

ஆல்ரவுண்டர் ரஷீத்கான தனது ட்விட்டர் பக்கத்தில், ”கிரிக்கெட் மட்டும்தான் எங்கள் நாட்டின் நம்பிக்கை. எனவே அதில் அரசியலை கலக்காதீர்கள்.

ஆப்கானிஸ்தானில் ஆடுவது ஆஸ்திரேலியாவிற்கு சரிவரவில்லை என்றால், பிபிலீக்கில் நான் ஆடுவதில் அர்த்தமில்லை” என்று ரஷீத் கான் ட்விட் செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியா-இலங்கை: டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் போட்டியும் இந்தியா வசம்!

”உயிர்விடும் அளவிற்கு சினிமா ஒன்றும் முக்கியமல்ல” – லோகேஷ் கனகராஜ்

+1
0
+1
0
+1
1
+1
5
+1
0
+1
4
+1
1