நடிகர் அஜித்குமார் துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்க போவதில்லை என்று அவரின் குழு தெரிவித்துள்ளது.
நடிகர் அஜித் துபாயில் நடக்கும் 24 ஹவர்ஸ் கார் பந்தய ரேஸில் பங்கேற்க பயிற்சி எடுத்து வந்தார்.
கார் பந்தய வீரராக மட்டுமின்றி அணி உரிமையாளராகவும் அஜித் இந்த பந்தயத்தில் களமிறங்க திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் துபாயில் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு, களத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார். எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்திற்கு பிறகும் அஜித் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில், துபாய் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் இருந்து அஜித்குமார் ஓட்டுநராக சில போட்டிகளில் இருந்து விலகுவதாக அஜித் ரேஸிங் அணிக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அஜித் ரேஸிங் அணிக்குழு வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்தை கருத்தில் கொண்டு கார் ரேஸில் குறிப்பிட்ட போட்டிகளில் இருந்து அஜித் விலகுகிறார். அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இருப்பினும், இன்று நடைபெறும் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : எடப்பாடியை தொடர்ந்து பிரேமலதா எடுத்த முடிவு!
விஷாலை வீட்டுக்கு கூப்பிட்டதே அவர் தான்… திசை மாறும் ஹெல்த் சர்ச்சை!