”சாதனை மேல் சாதனை” அசத்திய ரொனால்டோ: உச்சிமுகர்ந்த அல் நாசர் அணி!

விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோ லீக் அணிகளுக்காக விளையாடிய ஆட்டங்களில் 500 கோல்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி நடந்த பாடெஹ் அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ அல் நாசர் அணிக்காக முதல் கோலை அடித்தார்.

இந்நிலையில் , நேற்று(பிப்ரவரி 9 ) அல்-வெஹ்தாவுக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ லீக் அணிகளுக்காக விளையாடிய ஆட்டங்களில் 500 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் எட்டு நிமிடங்களில் பெனால்டி ஸ்பாட் மூலம் இரண்டாவது(501) கோலையும், ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மூன்றாவது(502)வது கோலையும் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அத்துடன் இந்த போட்டியில் ரொனால்டோ தனது 500, 501, 502, மற்றும் 503 ஆகிய நான்கு கோல்களை அடித்து அசத்தி அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை, ரியல் மாட்ரிட் அணிக்காக 44 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், யுவென்டஸ் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், போர்ச்சுகல் தேசிய அணிக்காக 10 ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது அல்-நாசர் அணிக்காக ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“நாடாளுமன்றத்தில் நாடகம் போடும் மோடி”: ஸ்டாலின் கடும் தாக்கு!

முதல் படத்திலேயே அதிர்ச்சி கொடுத்த குட்டி நயன்

+1
1
+1
0
+1
1
+1
11
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *