ஏசிசி யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வென்று இந்தியாவை வீழ்த்தி தொடர்ந்து 2 முறையாக ஆசியக் கோப்பையை முத்தமிட்டு வங்கதேசம் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஏசிசி யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்று வந்தது.
எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில், வங்கதேசம் பாகிஸ்தானையும், இந்தியா இலங்கை அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

அதன்படி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முகமது அமான் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 49.1 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக 4வது விக்கெட்டுக்கு 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரிசான் ஹோசன் 47 ரன்களும், முகமது ஷிகாப் ஜேம்ஸ் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் குஹா, சேத்தன் சர்மா மற்றும் ஹர்திக் ராஜ் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் 199 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே (1) – வைபவ் சூர்யவன்ஷி (9) ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து வந்த தமிழக வீரர் ஆன்ட்ரே சித்தார்த் 20 ரன்களிலும், கார்த்திகேயா 21 ரன்களிலும், கேப்டன் முகமது அமான் 26 ரன்களிலும் வெளியேற இந்திய அணி தடுமாறியது.

கடைசி நேரத்தில் வந்த ஹர்திக் ராஜ் (24) போராடினாலும், இந்திய அணி 35.2 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் வங்கதேசம் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி தரப்பில் இக்பால் ஹூசைன் எமான் மற்றும் ஹக்கிம் தமிம் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த தொடர் சிறப்பாக விளையாடிய வங்கதேச பவுலர் இக்பால் ஹூசைன் எமான் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச யு19 அணி தொடர்ச்சியாக 2 முறை ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”நூல் வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான் தான்” : திருமாவளவன்
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பலாத்காரம் : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்