யுவராஜ் சிங் தான் என்னைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. abhishek sharma says yuvraj singh
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 154 ரன்கள் குவித்து அசத்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்காரணமாக, இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அபிஷேக் ஷர்மாவை உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், தன்னுடைய சக்சஸுக்கு காரணம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தான் என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் ஷர்மா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “யுவராஜ் சிங் தான் என்னை முழுமையாக நம்பினார். ’நீங்கள் இந்த நாட்டுக்காக விளையாடப் போகிறீர்கள். அதனால் வெற்றி பெற வேண்டும்’ என்று தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். abhishek sharma says yuvraj singh

அதனால் என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய கிரிக்கெட் கேரியரில் யுவராஜின் பங்கு மிக முக்கியமானது.
கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி அவர் தொடர்ந்து என்னை வழிநடத்தி வருகிறார். என்னைப் பற்றி நன்றாக புரிந்துவைத்திருப்பவர் அவர் தான். அதனால் தான் நான் அவரை நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அபிஷேக் ஷர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சிறப்பான ஆட்டம். இதுபோன்ற ஆட்டத்தை தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். abhishek sharma says yuvraj singh