இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி,
விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதற்கு, அந்த அணி மீதும், கேப்டன் பாபர் அசாம் மீதும், பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்கிடம், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
“நான் விளையாடியபோது கேப்டனாக இருந்த யூனஸ் கானுக்கு ஒரு நல்ல நோக்கம் இருந்தது. அந்த நோக்கம், எனக்கு சிறப்பாக செயல்பட உத்வேகம் அளித்தது.
நாம் அனைவரும் பாகிஸ்தான் அணி குறித்தும் அதன் நோக்கம் குறித்தும் பேசுகிறோம்.
ஆனால், இங்கு பாகிஸ்தானில் தற்போது சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்பது போன்ற நோக்கம் தற்போது யாரிடமும் இல்லை”, என தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அப்துல் ரசாக், “ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொண்டு, ஒரு நல்ல குழந்தை வேண்டும் என எதிர்பார்த்தால், அது என்றும் நடக்காது”, என தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் ரசாக் கருத்துக்கு, பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/SharyOfficial/status/1724065501712707996
மேலும், அப்துல் ரசாக் இந்த கருத்தை தெரிவித்தபோது, அவருடன் இருந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் உள்ளிட்டோர், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவரின் கருத்துக்கு கை தட்டி வரவேற்பு வழங்கினர்.
இவர்களது இந்த செயலுக்கும் சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…