சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் பந்து வீச்சை சுப்மன் கில் சமாளித்துவிட்டால் அவரது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் அஷோக் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. குஜராத் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில்.
இந்த தொடரில் மட்டும் அவர் மூன்று சதங்களுடன் 851 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் 127 ரன்கள் அடித்து சுப்மன் கில் அதிரடி காட்டினார்.
இதனால் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்துவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிகவும் உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அஷோக் சோப்ரா கூறும்போது, “சுப்மன் கில் மற்ற வீரர்களை விட வித்தியாசமாக மட்டையை சுழற்றுகிறார்.
அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலிமையான வீரர்.
இறுதி போட்டியில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்துவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முனைப்புடன் செயல்படுவார்கள்.
ரவிந்திர ஜடேஜா, பதிரானா ஆகியோர் சுப்மன் கில்லுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர் தீபக் சஹாரின் வேகப்பந்துவீச்சு சுப்மன் கில்லுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
அவரை மட்டும் சுப்மன் கில் சமாளித்துவிட்டால், அதிரடி ஆட்டத்தை தொடருவார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மல்யுத்த வீரர்கள் கைது: ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்!
புதிய நாடாளுமன்றக் கட்டடம் : திறப்பு விழாவா… கால்கோள் இடும் விழாவா?