ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்து உலகக் கோப்பை கால்பந்து பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை கால் பந்து போட்டியில் விளையாடவிருக்கும் போர்ச்சுக்கல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
8வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்குத் தகுதி பெறும்.
எனவே விளையாட்டு ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தில் நிச்சயம் பஞ்சமிருக்கப் போவதில்லை.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட கூடிய 32 அணிகளும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவம்பர் 13) போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டஸ் சாண்டோஸ் உலகக்கோப்பைக்கான 26 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார்.
டியோகோ கோஸ்டா, ரூய் பாட்ரிசியோ, ஜோஸ் சா ஆகியோர் கோல் கீப்பர்களாக களமிறங்கவுள்ளனர்.

பின்கள வீரர்களாக டியோகோ டலோட், ஜோவோ கேன்செலோ, டானிலோ பெரேரா, பெபே, ரூபன் டயஸ், அன்டோனியோ சில்வா, நுனோ மென்டிஸ், ரபேல் குரேரோ ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நடுகள வீரர்களாக ரூபன் நெவ் ஸ், ஜோவா பால்ஹின்ஹா, வில்லியம் கார்வால்ஹோ, புருனோ பெர்னாண்டஸ், விடின்ஹா, ஒடாவியோ, ஜோவா மரியோ, மேதியஸ் நூன்ஸ், பெர்னார்டோ சில்வா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
முன்கள வீரர்களாக ரபேல் லியோ, ஜோவா பெலிக்ஸ், ரிக்கார்டோ ஹோர்டா, கோன்கலோ ராமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆண்ட்ரே சில்வா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மோனிஷா
டி20: இங்கிலாந்தின் இளம் புயல் சாம் கரன் வென்ற இரு பட்டங்கள்!