மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். கிடைத்த வாய்ப்பில் இங்கிலாந்துக்கு எதிராக 62, 68, 56 ரன்கள் குவித்த சர்பராஸ் கான் தேர்வுக்குழுவின் நம்பிக்கையையும் பெற்றார். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய வங்கதேச தொடருக்கான அணியில் அவர் அணியில் இடம்பெறுவரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். எனினும், நல்ல ஃபிட்னஸ் கடைப்பிடிப்பது அவசியம் என்று தான் கருதுவதாக சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார்.
இதனால், பெரும்பாலும் காலை 4.15 – 4.30 மணிக்கு எழுந்து நீண்ட தூரம் ஓடிப் பயிற்சிகளை எடுப்பதாகவும், அது தன்னுடைய ஃபிட்னஸை முன்னேற்ற உதவுகிறது என்றும் இதனால், தற்போது தன்னால் 30 நிமிடங்களில் 5 கிலோ மீட்டர் ஓட முடிகிறது என்று சர்பராஸ் கான் கூறியுள்ளார்.
ஓட்டப் பயிற்சிகளை முடித்த பின், ஜிம்முக்கு சென்று தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும் அதன் பின் மாலையில் பேட்டிங் பயிற்சிகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் மழை பெய்ததால் இது போன்ற பயிற்சிகளை நான் எடுக்கவில்லை என்றும் உள்ளரங்கத்தில் பயிற்சி எடுப்பதை விட வெளியே பயிற்சி எடுப்பதே சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் தனது எதிர்பார்ப்பு ஜீரோதான் என்றும் ஆனால் வாய்ப்பு வரும் போது அசத்துவதற்கு தான் தயாராக இருக்க வேண்டும் என்றும் சர்பராஸ் கான் கூறியுள்ளார். அதனாலேயே கடினமான பயிற்சிகளை தான் எடுத்து வருவதாகவும் சர்பராஸ் கான் கூறியுள்ளார்.
ஏதேனும் பேட்ஸ்மேன்களுக்கு காயம் ஏற்பட்டால் சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தனது 19வது வயதில் இருந்து இந்திய அணி வாய்ப்புக்காக காத்திருந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்துக்கு பின்பே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற்றார்.தற்போது மீண்டும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா… இயக்குநர் நித்திலனுக்கு விருது!
மகளிர் உரிமைத் தொகை வழங்க சிறப்பு முகாம்? – தமிழக அரசு விளக்கம்!
ஒன்றுமே விளையாடாதவர்களை மீண்டும் மீண்டும் பல வாய்ப்புக்களை கொடுத்து பெரிய ப்ளேயராக புரொஜக்ட் செய்கிறார்கள். இவர் மூன்று இன்னிங்கிலும் அரைசதம் அடித்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காரணம்
எங்கே பெரிய ஆளா ஆகிடுவாரோ என்ற பயம்.
ஆக இந்தியாவில் வினேஷ் போபத்துக்கு முன்பே பல உண்மைக் கதைகள் உள்ளன போலும்