2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறது. Kohli broke Sachin 2 biggest records
துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 4 பவுண்டரி, 4 சிக்ஸ்களுடன் 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில், களமிறங்கிய சுப்மன் கில், 8 ஃபோர், 3 சிக்ஸ்களுடன் 65 பந்துகளில் 79 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், வெப்ப அலையால் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, களத்தில் இருந்து வெளியேறினார்.
அதற்கு பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி – ஷ்ரேயஸ் அய்யர் இணை, ரோகித் சர்மா துவங்கி வைத்த அந்த ஆக்ரோஷமான ஆட்டத்தை சற்றும் தளரவிடாமல் விளையாடி வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இதன்மூலம், 49 செஞ்சுரிகளுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய டாப் 5 வீரர்கள்
விராட் கோலி – 50
சச்சின் டெண்டுல்கர் – 49
ரோகித் சர்மா – 31
ரிக்கி பான்டிங் – 30
சனத் ஜெயசூர்யா – 28
அதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கரின் 20 ஆண்டுகால சாதனை ஒன்றையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.
இன்றைய சிறப்பான ஆட்டத்தின் மூலம், ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல், சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
விராட் கோலி – 700* (2023)
சச்சின் டெண்டுல்கர் – 673 (2003)
மேத்யூ ஹைடன் – 659 (2007)
ரோகித் சர்மா – 648 (2019)
டேவிட் வார்னர் – 647 (2019)
விராட் கோலியுடன் (106* ரன்கள்) இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஷ்ரேயஸ் அய்யர், 66 (50) ரன்களுடன் விளையாடி வரும் நிலையில், இந்தியா 42 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்துள்ளது. Kohli broke Sachin 2 biggest records
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
நாக சைதன்யாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதோ!