இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி தனது 500 வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மா 80 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹானே 8 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி களமிறங்கியது. அதே நேரம் இது விராட் கோலியின் 500 வது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதன்படி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 97ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் விளாசினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கையில் மோடி கொடுத்த கூட்டணி லகான்- விஜயகாந்த் ரியாக்ஷன்!