இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்து ரவீந்தர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.
கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், நான்காவது நாள் ஆட்டத்தில் ரவீந்தர ஜடேஜா வங்கதேச வீரர் ஹசன் மக்முத் விக்கெட்டை வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் 300வது விக்கெட் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது இந்திய பந்து வீச்சாளர் இவர்.
அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களையும் எட்டி சாதித்துள்ளார். உலகில் மிக வேகமாக 300 விக்கெட்டுகள் 3,000 ரன்கள் எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதற்கு, ஜடேஜாவுக்கு 74 போட்டிகள் தேவைப்பட்டது.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அயன் போத்தம் 72 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வீரர்களில் கபில் மற்றும் அஷ்வினுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ரவீந்தர ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.
ஜடேஜா போல பல ஆல்ரவுண்டர்கள் 3000 ரன்கள் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இம்ரான்கான் 75 போட்டிகளிலும் கபில்தேவ் மற்றும் ரிச்சர்ட் ஹாட்லீ 83 போட்டிகளிலும் ஷான் பொல்லாக் 87 போட்டிகளிலும் ரவிச்சந்திர அஸ்வின் 88 போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தன்னை தானே சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!