ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதால் தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 4 ஆண்டுகள் விதிக்கப்படவிருந்த தடை, 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருக்கும் இந்தியா, பல பிரிவுகளில் பதக்க வேட்டை நடத்தி வருகிறது.
மேலும், நம் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிலர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவின் பதக்கப் பட்டியலும் அதிகரிக்க இருக்கிறது.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க 36 பேர் கொண்ட இந்திய தடகள அணியில் 24 வயதான தனலட்சுமி, 100மீ ஓட்டம் மற்றும் 4*100மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தனலட்சுமிக்கு இருமுறை சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பரிசோதனைகளிலும் அவர், தடை செய்யப்பட்ட ஸ்டீராய்ட் ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது.
அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு தடகள போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதால், தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதற்காக 3 ஆண்டுகள் தனலட்சுமிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணி வெற்றி!