World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்

விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று (ஆகஸ்ட் 25) நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அவரோடு இந்திய வீரர்கள் டி.பி.மானு மற்றும் கிஷோர் ஜெனாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தன் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும். ஆனால் முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரம் வீசியதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

மேலும் தொடரில் மிக நீண்ட தூரம் வீசி முதலிடம் பிடித்ததன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

அதே போன்று ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானு 81.31 மீட்டர் தூரத்துக்கு எறிந்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் 80.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 9வது இடம்பிடித்த  இந்தியாவின் கிஷோர் ஜெனாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 27) 12 பேர் பங்கேற்கும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக 3 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் 25 வயதான நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வதன் மூலம் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற சரித்திர சாதனையை அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே  2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம், 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்,வ்கடந்த ஆண்டு டைமண்ட் லீக்கிலும் சாம்பியன் பட்டம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுரை தங்கம் வெல்லவில்லை.

அந்த குறையை நிவர்த்தி செய்து நீரஜ் சோப்ரா மகத்தான சாதனை படைப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு: உதயநிதி உறுதி!

”நா யாருனு தெரியுமா?”: குழந்தைகளுடன் முதல்வர் க்யூட் உரையாடல்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *