25 K ரன்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி

டிரெண்டிங் விளையாட்டு

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசாத விராட் கோலி, தனது சொந்த மண்ணில் பெரிய சாதனையை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பு கடும் பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி , பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்.

முதல் இன்னிங்சில் தனி ஆளாக நின்று விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் விளையாடி 20 வது ரன்னை பதிவு செய்ததன் மூலம் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் என்று பார்க்கும்போது இந்திய அணியின் கோலி, 549 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 25,000 ரன்களை 588 இன்னிங்ஸ்களில் கடந்தார். அந்த வரிசையில் குறைந்த இன்னிங்ஸ்களில் விளையாடி அதிவேகமாக இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். ஒட்டுமொத்தமாக அதிக ஸ்கோர்களை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்தால் அதில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலிடத்தில் உள்ளார்.

சச்சின் 164 அரை சதங்கள், 100 சதங்கள் மொத்தம் 34,357 ரன்களை விளாசியிருக்கிறார். இலங்கை வீரர் குமார் சங்ககாரா 153 அரை சதங்கள், 63 சதங்களுடன் 28,016 ரன்களை குவித்துள்ளார். இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 146 அரை சதங்கள், 71 சதங்களுடன் மொத்தம் 27483 ரன்களை குவித்துள்ளார்.

இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே மொத்தம் 25,957 ரன்களையும், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் 25,534 ரன்களையும் பதிவு செய்துள்ளனர்.25,000 ரன்களை கடந்த வீரர்கள் லிஸ்டில் விராட் கோலியும் தற்போது இடம்பிடித்துள்ளார். விராட் கோலி மொத்தம் 129 அரை சதங்களையும் 74 சதங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 24,208 ரன்களுடன் இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தில் இருக்கிறார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மயில்சாமி மரணம்: தமிழிசை இரங்கல்!

மனிதநேய சாமி: யார் இந்த மயில்சாமி?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *