கேரளாவை சேர்ந்த 23 வயது இளைஞர் துபாயில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியை சேர்ந்த நாசர் என்பவரின் மகன் அசார். இவர், கடந்த சனிக்கிழமை துபாயில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று சுருண்டு விழுந்து இறந்து போனார். மருத்துவர்கள் அவரின் உடலை பரிசோதித்த போது, மாரடைப்பு காரணமாக அவர் இறந்து போனது தெரிய வந்தது.
சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை முடித்த அசார், துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அசார் இறந்த தகவல் கேட்டு, உறவினர்கள் துடி துடித்து போனார்கள். அவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட எந்த விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் 6 மாதத்துக்கு ஒரு முறை இதயத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதய நோய் இருப்பது தெரியாமலேயே இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கால்பந்து விளையாடும் போது வீரர்கள் இறப்பது தற்போது சகஜமாகி வருகிறது. கடந்த 2014- 18 காலக்கட்டத்தில் மட்டும் உலகளவில் 617 பேருக்கு கால்பந்து விளையாடும் போது மாரடைப்போ, அல்லது கார்டியாக் அரெஸ்டோ ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அதில், ஒரு சிலர் காப்பாற்றப்பட்டாலும் பலர் இறந்து போயுள்ளனர். எனவே, கால்பந்து வீரர்கள் இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்பது நிச்சயமான உண்மை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கெளதம் மேனன் டைரக்சனில் மேடையில் ரொமன்ஸ் செய்த விஜய் ஆண்டனி
சிறப்பு பூஜை நடத்தியும் பயனில்லை… 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.11.93 லட்சம் சிக்கியது!