2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்? எந்த நகரத்துக்கு முன்னுரிமை?

Published On:

| By Kumaresan M

வரும் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா சார்பில் விரிவான அறிக்கை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னதாக போட்டியை  நடத்தும்  நகரம் தேர்வு செய்யப்பட்டிருக்கும். அப்போதுதான், மைதானங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும். ஏற்கனவே, பிரதமர் மோடி 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் Olympic Committee’s Future Host Commission-க்கு  விரிவான அறிக்கை  அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில் யோகா, கோகோ, கபடி, டி20 கிரிக்கெட், செஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளை ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்கிற ரீதியில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற நாடுகளில் போட்டியில் உள்ளன.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. ஒருவேளை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் அகமதாபாத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா தற்போதைய தலைவர் தாமஸ் பேட்ச்சுக்கு ஆதரவாக செயல்படும் என சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தவறான தகவல்கள்… விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

கஸ்தூரி பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது… ஆ.ராசா பதிலடி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel