2025 ஐ.பி.எல்: தோனி மதில் மேல்பூனை… சி.எஸ்.கே. நிர்வாகிகளை சந்திக்க மறுப்பு!

Published On:

| By Kumaresan M

ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, சென்னை அணியின் கேப்டன் தோனி 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய ஐ.பி.எல். விதிப்படி சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடாத   தோனியை  அன்கேப்டு வீரர்கள் வரிசையில் சென்னை அணி 4 கோடிக்கு வாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகிகள் தோனியை சந்தித்து பேச நேரம் கேட்டும் அவர் நேரம் கொடுக்கவில்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஏலத்துக்கு முன்னதாக எந்த எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம் என்கிற பட்டியலை பி.சி.சி.ஐ.யிடத்தில் அணி நிர்வாகங்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

ஆனால், தோனியை சந்திக்க முடியாத நிலையில் சென்னை அணி நிர்வாகம் குழம்பிப் போய் கிடக்கிறது. தற்போது, சில பணிகள் இருப்பதால் அக்டோபர் 29 அல்லது 30 ஆம் தேதி சந்திக்கலாம் என்று தோனி கூறிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “தோனியிடத்தில் இருந்து இதுவரை உறுதியான முடிவு கிடைக்கவில்லை. சென்னை அணிக்காக அவர் விளையாடுவார் என்று நம்புகிறோம். அக்டோபர் 31 ஆம் தேதி உறுதியான தகவல் கிடைக்கும்” என்கிறார்.

தற்போது, ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அணி 120 கோடி செலவழித்து வீரர்களை ஏலம் எடுக்க முடியும். இது கடந்த ஏலத்தை விட ரூ.20 கோடி அதிகமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மாட்டிய மருத்துவமனை… மாயமான இர்பான்!

ஒரு பேக்கின் விலை ரூ.8 லட்சம் முதல் 4 கோடி … ஹமாஸ் தலைவர் மனைவியின் கையில் பிர்கின் ரக பேக்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share