சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்: தோல்வியில் இருந்து மீள்வார்களா?

விளையாட்டு

இந்தியாவில் 2023 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவரும் நியூசிலாந்து மற்றும் இந்தியா, விளையாடிய 4 போட்டிகளும் வெற்றி பெற்று முதல் மற்றும் 2வது இடங்களில் உள்ளது.

அந்த வரிசையில், இந்த தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் அணி முதன் முதலாக ஹைதராபாத் வந்தடைந்தது. அங்குள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், ஆதிக்கத்துடனேயே இந்த தொடரை துவங்கியது.

அதன்பிறகு, ஹைதராபாத்தில் இருந்து அகமதாபாத் சென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்து, பெங்களுருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள, அடுத்தடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

அந்த வகையில், வரும் அக்டோபர் 23 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 27 அன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவும், பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

 

 

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் அணியும் சென்னை வந்திருந்தது. அப்போது, ஆப்கான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத் கான், சென்னையில் உள்ள தோனியை நேரில் சந்தித்திருந்தார்.

இது குறித்த புகைப்படத்தை X தளத்தில் பகிர்ந்த ரஷீத் கான், ‘மஹி பாயை சந்திப்பது எந்நாளும் மகிழ்ச்சியே”, என தனது பதிவில்குறிப்பிட்டிருந்தார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

எய்ம்ஸுக்கு செங்கல்… நீட்டுக்கு முட்டை : மத்திய அரசை விமர்சித்த உதயநிதி

“பாகிஸ்தான் ஜிந்தாபாத் கூடாது”: பெங்களூரு போட்டியில் வெடித்த சர்ச்சை!

“துர்கா எந்த கோயிலுக்கு போறாங்கனு பார்க்கறதுதான் பாஜக வேலை” : ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *