2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, இந்தியாவில் வரும் அக்டோபர் 5 அன்று துவங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக தங்களது 15 பேர் கொண்ட அணியை அனைத்து நாடுகளும் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், அதில் மாற்றங்கள் மேற்கொள்ள செப்டம்பர் 28 வரை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவகாசம் அளித்திருந்தது.
அந்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்தியா தனது அணியில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அக்சர் பட்டேலுக்கு பதிலாக, சுழற்பந்து ஜாம்பவன் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
2023 ஆசிய கோப்பை தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில், அக்சர் பட்டேல் காயமடைந்து வெளியேறினார்.
பின், தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், காயத்திலிருந்து குணமடையாததால், அவரால் அந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இப்படியான சூழ்நிலையிலேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவும் தனது அணியில் ஒரு அதிரடி மாற்றத்தை மேற்கொண்டிருந்தது. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்டன் அகருக்கு பதிலாக, மர்னஸ் லபுசானே உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி
ரோகித் சர்மா (c), ஹர்திக் பாண்டியா (vc), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரதுல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.
முரளி
அதிமுக பொதுக்குழு தீர்மானம் : உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!
சித்தா பிரஸ்மீட் : கன்னட அமைப்பினரால் பாதியிலேயே கிளம்பிய சித்தார்த்
பாஜக அதிமுக கூட்டணி முறிவு : அண்ணாமலை முக்கிய அறிவிப்பு!
அதிமுக பாஜக கூட்டணி முறிவு : டெல்லி தலைமையிடம் பேசிய கிருஷ்ணசாமி
பல்வீர் சிங் மீதான அடுத்தக்கட்ட விசாரணை : அரசுக்கு சிபிசிஐடி கடிதம்!