இஷானுக்கு 200/கோலிக்கு 100: இந்தியா புதிய சாதனை!

விளையாட்டு

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் இரட்டை சதத்தையும், விராட் கோலி சதத்தையும் விளாசியதுடன் இந்தியா புதிய சாதனையையும் எட்டியிருக்கிறது.

இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று(டிசம்பர் 10) சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேச அணியின் பவுலர்களை இந்திய அணி வீரர்கள் தெறிக்கவிட்டனர்.

தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 3 ரன்னிலேயே ஆட்டமிழந்தாலும், ஒருபக்கம் நின்று இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்தார். அவர் 131 பந்துகளில், 10 சிக்ஸ், 24 பவுண்டரிகள் விளாசி 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு துணையாக நின்று ஆடிய விராட் கோலியும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 72 ஆவது சதத்தை அடித்து, ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 72 சர்வதேச சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 ஆட்டத்தில் சதம் விளாசிய கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வந்தார்.

முதல் 2 போட்டியில் கூட சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்த அவருக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமைந்தது. விராட் கோலி கொடுத்த எளிதான கேட்ச்சை வங்கதேச வீரர் தவறவிட்டார். இதையடுத்து விராட் கோலி, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 72வது சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 85 பந்துகளில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடித்தார். 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்துக்கு 410 ரன்கள் இலக்கு நிர்ணயித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிகமுறை 400 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையையும் இந்தியா சமன் செய்தது.

இதுவரை தென் ஆப்பிரிக்கா 6 முறையும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 5 முறையும் நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, மற்றும் இலங்கை அணிகள் தலா ஒருமுறையும் 400 ரன்களை குவித்து உள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 2 போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்று ரசிகர்களுக்கு ஆறுதலை தந்திருக்கிறது.

கலை.ரா

ராணுவத்தில் எவ்வளவு காலியிடம்?: மத்திய அரசு பதில்!

“முட்டாளே போ”: கூலான மெஸ்ஸி சீறியது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *