20 வயதுக்குப்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 1 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் சோபியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியின் இறுதியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 16 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்துள்ளனர்.

மகளிர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. தங்கம் வென்ற ஆண்டிம் பங்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா 160 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் 1 வெள்ளி 6 வெண்கலம், ஆடவர் கிரேக்க ரோமன் பிரிவில் 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் இந்தியா வீரர்கள் வென்றுள்ளனர்.
ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் 159 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், அமெரிக்கா 132 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
யு20 உலக சாம்பியன்ஷிபில் இந்தியாவின் பதக்கங்கள்
மகளிர் ஃப்ரீஸ்டைல்
- ஆண்டிம் பங்கல் – 53 கிலோ எடைப் பிரிவில் தங்கம்
- சோனம் மாலிக் – 62 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி
- பிரியங்கா – 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி
- பிரியா மாலிக் – 76 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி
- பிரியன்ஷி பிரஜாபத் – 50 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- சிட்டோ – 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- ரீதிக்கா – 72 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
ஆடவர் ஃப்ரீஸ்டைல்
- மகேந்திர கெய்க்வாட் – 125 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி
- அபிஷேக் டாக்கா – 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்
- மோகித் குமார் – 61 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- சுஜீத் கல்கல் – 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- முலாயம் யாதவ் – 70 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- சாகர் ஜக்லன் – 74 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- நீரஜ் பரத்வாஜ் – 97 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
கிரேக்க-ரோமன்
- சுமித் – 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
- ரோஹித் தஹியா – 82 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம்
மோனிஷா
72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி இன்று தொடங்குகிறது!