எல்லாமே பாசிடிவ் தான்… என்னை தகுதிப்படுத்தி கொள்வேன் : இஷாந்த் கிஷன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெறாததை நேர்மறையாகவே பார்க்கிறேன் என்றும் என்னை மேலும் தகுதிப்படுத்திக்கொண்டு அணியில் இடம்பெற முயற்சிப்பேன் என்றும் இஷாந்த் கிஷன் கூறியுள்ளது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதில் 6 அணிகள் விளையாடுகின்றன. இந்தியா ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இறுதிப்போட்டியானது, துபாயில் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.
கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணியில் இடம்பெறாதது குறித்து, இஷாந்த் கிஷன் கூறும்போது, “அடுத்தப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெறும் அளவுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன். அதற்காகத் தொடர்ச்சியாக உழைப்பேன்.
நியாயமான முறையில் தான், இந்திய அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். யாருக்கு வாய்ப்பளித்தால் சிறப்பாக ஆடுவார் என்பதை கவனத்தில் கொண்டு தான் வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படாததை நேர்மறையான விஷயமாகவே எடுத்துக் கொள்கிறேன். நான் சிறப்பாக ஆட நிறைய உழைப்பை போட போகிறேன். அதிக போட்டிகளில் விளையாடி ரன்களை குவிக்க போகிறேன்.
அப்போது நிச்சயமாக போட்டித் தேர்வாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை அணியில் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.15.5 கோடிக்கு மும்பை அணி இஷாந்த் கிஷனை தேர்ந்தெடுத்தது. 14 ஆட்டங்களில் விளையாடிய இஷாந்த் கிஷன் 418 ரன்களை குவித்திருந்தார். மேலும் மூன்று அரை சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா