ADVERTISEMENT

ரூ.1.50 கோடி செலவில் முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் சிகிச்சை – உதவி கேட்டு பெற்றோர் மனு

Published On:

| By Pandeeswari Gurusamy

முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு
ரூ1.50 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பெற்றோர் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை துடியலூர் NGGO காலனியை சேர்ந்தவர்கள் அஜய் சில்வெஸ்டர்- சரண்யா தம்பதியினர். இவர்களது குழந்தை லியோனல் தாமஸ்(2 வயது). இந்த குழந்தை முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிக்க 1.50 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் மருத்துவ உதவி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து அதன் வளர்ச்சியில் சில மாற்றங்கள் தெரிந்தது. இதனால் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. நோய் காரணமாக குழந்தையால் நேராக உட்கார முடியாது, நடக்க முடியாது, கழுத்தை நிமித்தி பார்க்க முடியாது, சரியாக மூச்சு விட முடியாது என்றனர்.

பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சென்ற போது ஜீன் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதற்காக ரூபாய் 16 கோடி செலவாகும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் வரி விலக்கு போக 8.1/2 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறினர். அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றரை கோடிக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எங்களால் இந்த அளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் அரசு மூலம் நிதி உதவி பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுள்ளோம்.” என தெரிவித்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share