ADVERTISEMENT

முருக பக்தர்களுக்காக.. தாம்பரம்- நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள்

Published On:

| By Mathi

SPL Trains

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந் சஷ்டி- சூரசம்ஹாரம் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 27-ந் தேதி கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

திருச்செந்தூர் கந்த சஷ்டி- சூரசம்ஹார விழாவுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வண்டி எண் 06106 திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை (அக்டோபர் 26) இரவு 21.00 மணிக்கு புறப்பட்டு இரவு 22.30 மணிக்கு திருநெல்வெலியை சென்றடையும்.

ADVERTISEMENT

வண்டி எண் 06105 திருநெல்வேலி – திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், நாளை இரவு 23.00 மணிக்கு புறப்பட்டு, நாளை மறுநாள் அக்டோபர் 28 அதிகாலை 00.30 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், பாளையங்கோட்டை, ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

சென்னை தாம்பரத்தில் இருந்து வண்டி எண் 06135 திருநெல்வேலி- திருச்செந்தூருக்கு இன்று இரவு (அக்டோபர் 26) 21.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து வண்டி எண் 06136 இரவு 22.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share