மகா தீபம்: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்!

Published On:

| By Minnambalam

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 6ஆம் தேதி ஏற்றப்படுகிறது.

ADVERTISEMENT

இதைக் காண திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னை, புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தச் சிறப்பு ரெயில் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.40 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக வந்து பகல் 12.15 மணி அளவில் திருவண்ணாமலைக்கு செல்கிறது.

பின்னர் அந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக அன்று மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்று அடைகிறது.

ADVERTISEMENT

இதேபோல் இந்தச் சிறப்பு ரெயில் இதே வழிதடத்தில் 7ஆம் தேதியும் (புதன்கிழமை) இயக்கப்பட உள்ளது என்ற தகவலை ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share