குட்நியூஸ்- சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 21-ல் நெல்லைக்கு சிறப்பு ரயில்- நாளை ரிசர்வேசன் தொடக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Special Train

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 21-ந் தேதி திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Special Train from Chennai Egmore to Nellai on June 21

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே ஜூன் 21-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்; மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 22-ந் தேதி இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 06089) ஜூன் 21 சனிக்கிழமை இரவு 9.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருச்சி- திண்டுக்கல் மார்க்கமாக மறுநாள் காலை 8.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06090) ஜூன் 22-ந் தேதி இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இந்த சிறப்பு ரயில் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை ஜூன் 18-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share