பிரபாஸ் பிறந்தநாளில் வெளியாகும் சிறப்பு டீசர்!

Published On:

| By Balaji

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும் பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு

ADVERTISEMENT

வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். விக்ரமாதித்யா யார்?’ என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று ராதே ஷியாம் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

**அம்பலவாணன்**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share