தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 2) 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதால் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி முதல் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 2000 இடங்களில் மருத்துவ சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 5.22 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
அதேபோல தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 100 இடங்களில் முதல்வரின் மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
சென்னையில் ராயபுரம், அடையாறு, மயிலாப்பூர், அயனாவரம், நீலங்கரை பகுதிகளில் காப்பீடு முகாம் நடைபெறுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தில் இதுவரை 1.45 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்; இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்
