தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா : சிறப்பு பேருந்துகள் இயக்கம் – எங்கிருந்து எங்கே?

Published On:

| By Kavi

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 9) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. special leave for weekend holidays

நாளை ஏப்ரல் 10  மஹாவீர் ஜெயந்தி, 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டால் அடுத்தது, சனி ஞாயிறு வார விடுமுறை, திங்கள் கிழமை தமிழ் புத்தாண்டு வருகிறது.

இந்த 4, 5 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு  சென்னை உட்பட வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். 

தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/04/2025, 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 190 பேருந்துகளும்,  11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 525 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 50 பேருந்துகளும் 11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 100 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 09/04/2025 அன்று 20 சிறப்பு பேருந்துகளும், 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. 

மேலும், 14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை அன்று 10.065 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 14,898 பயணிகளும், சனிக்கிழமை அன்று 8,278 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 12.399 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobido App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க  போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. special leave for weekend holidays

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share