சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!

Published On:

| By Minnambalam

பல்வேறு அரசு துறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைக் களைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைத்த சிறப்பு முகாம்கள் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID – UDID) பெறாத மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அமிர்தஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

6.10.2022 – தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம், 7.10.2022 – பெருங்குடி, 11.10.2022 – ஆலந்தூர், 12.10.2022 – சோழிங்கநல்லூர், 15.10.2022 – வளசரவாக்கம், 17.10.2022 – அம்பத்தூர் ஆகிய இடங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.  

மேற்குறிப்பிட்ட தேதிகளில் மண்டலங்கள் மற்றும் வார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் (ஆதார் அட்டை, மருத்துவர் சான்றிதழ்,  புகைப்படம்) ஆகியவற்றுடன்,

ADVERTISEMENT

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தங்களுக்கு தேவையான UDID அட்டை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மேலும் மேற்படி முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும்,

ADVERTISEMENT

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை அவையங்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே அளவீடுகள் செய்யப்படும் என்பதனாலும் மாற்றுத்திறனாளிகள் வந்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-ராஜ்

போராட்டம் தொடரும்: கோவை தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

பிரசாந்த் கிஷோர் நடைப்பயணம் வெற்றிபெறுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share