வீக் எண்ட் சுப முகூர்த்த ஸ்பெஷல் பஸ்கள்: எங்கெங்கே? எப்போது?

Published On:

| By indhu

Special Buses for Mugurtham and Weekends!

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில்  சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 24 அன்று 535 பேருந்துகளும், மே 25ஆம் தேதி 595 பேருந்துகளும் இயக்கப்படும்.

ADVERTISEMENT

Special Buses for Mugurtham and Weekends!

தொடர்ந்து, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மே 24 அன்று 635 பேருந்துகளும், மே 25 அன்று 595 பேருந்துகளும் சென்னை கோபம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒருர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்கிறது.

மேலும், மே 24 அன்று 65 பேருந்துகளும், மே 25 அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மே 24, 25 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல்வரை ஒருமையில் பேசலாமா? – சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

மோடியை தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்: டிஜிபியிடம் செல்வப்பெருந்தகை புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share