CSK vs MI : சேப்பாக்கத்தில் முதல் போட்டி… சிறப்பு ரயில்கள், பேருந்துகள் – முழு விவரம்!

Published On:

| By Raj

Bus Train for IPL

IPL 2025 : சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தாண்டு சீசனுக்கான முதல்ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று (மார்ச் 23) நடக்கிறது. இதில் பரம வைரிகளான சென்னை அணியும் – மும்பை அணியும் விளையாடுகின்றன. இதை காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சிறப்பு ரயில்கள், பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Bus Train for IPL

3 சிறப்பு மின்சார ரயில்கள்!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23 (இன்று), 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 11.25 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். Special Bus Train for IPL

அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 10.10 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு வேளச்சேரியை அடையும். மற்றொரு சிறப்பு ரயில் சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரியை அடையும்.

இந்தச் சிறப்பு ரயில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், சென்னை கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தத் தகவல்கள் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்!

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ நிறுவனமும் முடிவு செய்துள்ளது. Special Bus Train for IPL

அதன்படி ஸ்பான்சர் செய்யப்பட்ட போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் (போட்டியை காண்பதற்கான டிக்கெட்) பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 மற்றும் 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!

மேலும், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திடம் பயணக் கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் பயணிகள், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகளில் (ஏசி பேருந்து தவிர) கட்டணமின்றி பயணிக்கலாம்.

போட்டிக்கு பின் அண்ணா சதுக்கம், ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாசிலை முதல் எம்.ஏ சிதம்பரம் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. Special Bus Train for IPL

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share