விக்கிரவாண்டியில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய், திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் தமிழகத்தை ஒரு குடும்ப கட்சி கொள்ளையடித்து சுரண்டிக்கொண்டிருக்கிறது என்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், நெல்லையில் இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம் விஜய்யின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அப்பாவு, “சரத்குமார், கமல் என நிறைய நடிகர்கள் ஏற்கனவே கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது விஜய்யும் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தவெக பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் முன்னணி தலைவர்களுடன் நெருக்கமான உறவு இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தைப் பற்றி விஜய்யின் தந்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஏற்கனவே பாஜக ரஜினிகாந்தை அரசியலில் களமிறக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அவர் அரசியலுக்கு வரவில்லை. அதற்கு பதிலாக தற்போது விஜய்யை களமிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ‘எப்போதும் வென்றான்’… விஜய்க்கு ஸ்டாலின் மறைமுக பதில்!