சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. spacecraft has been sent to bring back Sunitha Williams
அமெரிக்காவின் மூத்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஏற்கனவே இரண்டு முறை நாசாவுக்கு விண்வெளிக்கு சென்று வந்துள்ளார்.
2006, 2012 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்றார். அவருடன் ஃபுட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரரும் சென்றார்.
முதலில் அவர்கள் 8 நாட்களில் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் அவர்கள் சென்ற போயிங் ரக ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, பூமி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. போயிங் ராக்கெட் மட்டுமே தனியாக பூமிக்கு திரும்பியது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த டொனால்ட் டிரம்ப், பைடன் நிர்வாகமே இரு வீரர்கள் விண்வெளியில் சிக்கித் தவிக்க காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து ட்ரம்பின் நண்பரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற விண்வெளி வீரரையும் அழைத்து வர திட்டமிடப்பட்டது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எண்டுரன்ஸ் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணமாக கடைசி நேரத்தில் இந்த திட்டமும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நாசா வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 14ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் எண்டுரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மேக்லைன், நிக்கோலி, ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிசி, ரஷ்ய வீரர் கிறிஸ் பெஸ்கோ ஆகியோர் செல்வார்கள்.
மார்ச் 15ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் எண்டுரன்ஸ் விண்கலம் இணையும்.
மார்ச் 19ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்புவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இரவு 7.03 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.33) பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலம் இன்று இரவு 11.30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19ஆம் தேதி அனைவரும் பூமி திரும்புவார்கள். வானிலையை பொறுத்து இந்த தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் நாசா கூறியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் சுனிதா வில்லியம்ஸ் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. spacecraft has been sent to bring back Sunitha Williams