கிச்சன் கீர்த்தனா: சொக்கவைக்கும் சோயா சங்க்ஸ் ரைஸ்!

Published On:

| By Kavi

soya chunks rice recipe

டிபன் பாக்ஸில் மதிய உணவாக  வைத்துக் கொடுக்க, விருந்தினர் வரும்போது செய்து அசத்த, பிக்னிக் போகும்போது எடுத்துச் செல்ல என்று சமய சஞ்சீவினியாக கைகொடுக்கும் மல்டி பர்பஸ் உணவு… வெரைட்டி ரைஸ் எனப்படும் கலந்த சாதம் வகைகள். இந்த சோயா சங்க்ஸ் ரைஸ் ரெசிப்பி, வீட்டிலுள்ள அனைவரையும் சொக்க வைக்கும்.  

என்ன தேவை?

ADVERTISEMENT

பச்சரிசி – 2 கப்
சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – 12 முதல் 15 வரை
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தயிர் – அரை கப்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?  

ADVERTISEMENT

வெங்காயத்தை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கவும். சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பிறகு பிழிந்து குளிர்ந்த நீரில் 2,3 முறை அலசி  நீரை ஒட்டப் பிழியவும். பிரஷர் பேன் (pressure pan) அல்லது சின்ன குக்கரில் எண்ணெய், நெய் விட்டு… காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், பிழிந்து வைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கி… அரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து பானை (அல்லது குக்கரை) மூடவும்.

ADVERTISEMENT

2 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும். ஆவி பறக்க ஆனியன் ராய்த்தாவோடு பரிமாறவும்.

பிரதமரை சந்தித்த நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி: முக்கிய கோரிக்கை!

ரிசர்வ் பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்: போராட்டத்தில் குதித்த பெண்கள்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share