தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Southwest monsoon to start early
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்றால் தென்மேற்கு பருவமழை பொழியும். பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி படிப்படியாக வடக்கு நோக்கிப் பரவி, ஜூலை 15 ஆம் தேதி வாக்கில் முழு நாட்டையும் உள்ளடக்கும். Southwest monsoon to start early
ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்பாகவே, வரும் 13ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்களா விரிகுடா, நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று முன்தினம் (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மே 4 நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. Southwest monsoon to start early
