தொடங்கும் தென்மேற்கு பருவமழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட் … தமிழகத்துக்கு?

Published On:

| By Kavi

southwest mansoon red alert

தென்மேற்கு பருவமழை தமிழகத்திலும் கேரளாவிலும் நாளை தொடங்குகிறது. southwest mansoon red alert

அந்தமானில் கடந்த மே 14ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில் வழக்கத்தை விட ஒரு வாரத்துக்கு முன்னதாக கேரளாவிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.

அதன்படி நாளை மே 25ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்குகிறது. தமிழகத்திலும் சில பகுதிகளில் பரவவுள்ளது.

இதன்காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கேரள மாநிலம் காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தொடங்கும் பருவமழை தமிழகத்திலும் சில பகுதிகளில் பரவவுள்ளதால், தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தசூழலில் அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயல் சின்னமாக மாறாமல், இன்றே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கர்நாடகாவின் ரத்தினகிரிக்கு டபோலிக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.

வங்கக் கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. southwest mansoon red alert

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share