அதிகரித்து வரும் பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 6 ரயில்களில் ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. Southern Railways added new coaches in 6 trains
இது குறித்து தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாகர்கோவிலிலிருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக கச்சேகுடா (ஹைதராபாத்) செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (No.16354) 19.7. 2025 முதல் நிரந்தரமாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும்.
கச்சேகுடாவிலிருந்து (ஹைதராபாத்) சேலம், நாமக்கல், கரூர் வழியாக நாகர்கோவில் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (No.16353) வரும் 20ம் தேதி முதல் நிரந்தரமாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் (No.12243) வரும் ஜூலை 21ஆம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.

கோயம்புத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் (No.12243) வரும் 21ம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.
கேஎஸ்ஆர் பெங்களூரு – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் உதய் தினசரி ரயிலில் (No. 22665) வரும் 21 ஆம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
கோயம்புத்தூர் – கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் (No.22666) வரும் 22ஆம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு பெட்டி பொருத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.