South Indian Coconut Festival
தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் ‘தென்னிந்திய தென்னை திருவிழா’ எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது,
“தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது.
தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயைப் பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த ‘தென்னிந்திய தென்னை திருவிழா’ நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் ஒருங்கிணைத்துள்ளோம்.
இதில் 2,000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுநர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
குறிப்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகளின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்துக்கு தேவையான எளிமையான கருவிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் இயற்கை சந்தையில் 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன.
இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பர்ய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!
பியூட்டி டிப்ஸ்: டூ இன் ஒன்… உள்ளே – வெளியே!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சேமியா பகளாபாத்
South Indian Coconut Festival
