தமிழகத்தில் ஆளும் திமுக திராவிட மாடல் அரசு, ‘Sorry மா மாடல் சர்க்காராக’ மாறிவிட்டதாக தவெக தலைவர் நடிகர் விஜய் காட்டமாக விமர்சித்துள்ளார். TVK Vijay DMK Govt
தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கோரி சென்னையில் இன்று ஜூலை 13-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது:
திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார், ஒரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அந்த அஜித்குமாருக்கு நடந்த கொடுமைக்கு சிஎம் சார் சாரி சொல்லி இருக்கிறார். இதையும் கொஞ்ச சொல்லுங்க சார்.
உங்க ஆட்சியில் 24 பேர் போலீஸ் கஸ்டடியில் இறந்து போயுள்ளனர். அந்த 24 குடும்பங்களுக்கும் சாரி சொன்னீங்களா சிஎம் சார்? தயவு செஞ்சு சாரி சொல்லிடுங்க சிஎம் சார்.

அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரண உதவியை 24 குடும்பங்களுக்கு கொடுத்தீங்களா? தயவு செய்து இப்பவாவது கொடுங்க சார்..
சாத்தான்குளம் ஜெபராஜ், பெனிக்ஸ் லாக்கப் மரணங்கள் வழக்கை சிபிஐக்கு மாற்றிய போது, தமிழக காவல்துறைக்கு அவமானம் என சொன்னீர்கள் சிஎம்சார். இப்போது அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருக்கிறீர்களே.. இது அவமானம் இல்லையா?
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் கைப்பாவை சிபிஐ. அவங்க பின்னாடி ஒளிந்திருக்கிறீர்களே? ஏன் தெரியுமா? லாக்கப் மரணங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தவெக கேட்டுள்ளது. இதற்கு பயந்து போய்தான் சிபிஐ-க்கு மாற்றி இருக்கிறீர்கள்.ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் பதுங்கி இருக்கிறீர்கள்.
இந்த ஆட்சியில் அண்ணா யுனிவர்சிட்டி தொடங்கி எத்தனை சம்பவங்கள்.. அத்தனை பிரச்சனையிலும் நீதிமன்றம்தான் தலையிடுகிறது.. எல்லா பிரச்சனைக்கும் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனில் நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? உங்க பதவி எதுக்கு சார்?
உங்ககிட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடையாது. எதற்கெடுத்தாலும் Sorry மா, நடந்திருக்கக் கூடாதுதான் என்பதுதான் பதில். இங்கே வெற்று மாடல் அரசு, Sorry மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது. இப்பவாவது தவறுகளுக்கு பரிகாரம் தேடுங்க.. சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லை எனில் தவெகவினர் மக்களோடு மக்களாக நின்று போராடி சரி செய்ய வைப்போம். இவ்வாறு விஜய் பேசினார்.
