ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ட்ரைலர் இன்று (மார்ச் 2 ) வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் அவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மை கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

’சொப்பன சுந்தரி’ இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இன்று (மார்ச் 2 ) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரெய்லரில்
ஒரு காருக்காக ஒரு குடும்பமே எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதை, மிகவும் காமெடியாக கூறப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாகாலாந்து, திரிபுரா மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!
பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: அவரே சொன்ன தகவல்!