25 வருஷத்துக்கு முன்னால… சூரி உருக்கம்!

Published On:

| By Selvam

25 வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வெறும் கையோடு வந்த சூரி, இன்று சினிமாத்துறையில் நடிப்பதற்கு காரணம் ரசிகர்கள் தான் என்று உணர்ச்சிபொங்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னிமுகுந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் கருடன். மே 31-ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக சூரி வெளியிட்டுள்ள வீடியோவில்,

“கருடன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வார காலத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கருடனை இவ்வளவு பெரிய வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு என் சார்பாகவும் என் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளைஞர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இந்த படம் அமைந்தது ரொம்ப மகிழ்ச்சி.

25 வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வெறும் கையோடு வந்த சூரியை இன்னும் நான் மறக்கவில்லை. இன்னைக்கு நான் நடிகராக நடிக்கிறேன் என்றால், நீங்கள் கொடுத்த இடம் தான்.

கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கிற விதமாக நல்ல படைப்புகளை வாழ்நாள் முழுவதும் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முழு மூச்சாக அதற்காக நான் வேலை செய்வேன்.

நாம் வணங்குகின்ற சங்கையா சாமி, ஆத்தா மீனாட்சி உங்களுக்கு எப்போதும் துணை நிற்க மனதார வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிவி, வீடியோ கேம்ஸ்’ க்கு குழந்தைகள் Addict ஆகாமல் இருக்க…

தேர்தல் முடிவுகள்… என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share